இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ரூ.19 லட்சத்து 47 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் எடையூர் புதுத்தெருவைச் சேர்ந்த 53 வயதான ஜெயக்குமார் என்பவர் எடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளார். இதற்கு முதல் வருடத்திற்கான பிரிமீயம் தொகையான 1,09,104 ரூபாய் ஜிஎஸ்டியுடன் சேர்த்து செலுத்தியுள்ளார். இந்த காப்பீட்டின் முதிர்வு தேதி 25/3/2036 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேன்மொழி திருத்துறைப்பூண்டி ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது கணவர் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகையான 18 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் தனக்கு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் - ரூ. 19 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கு.ராஜசேகர் | 26 Aug 2022 05:09 PM (IST)
மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக விதிக்கப்பட்ட இழப்பீடுத் தொகை 1 லட்சம், வழக்கு செலவு தொகையாகு 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
Published at: 26 Aug 2022 05:09 PM (IST)