திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் களவு போவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செல்போன்கள் திருடு போகும் போதும் காணாமல் போகும்போதும் கண்டிப்பாக காவல்துறையிடம் அதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு புகார் அளிப்பவர்கள் செல்போன்கள் கண்டிப்பாக மீட்டு தரப்படும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பெரும்பாலும் செல்போன்கள் களவு போவது மற்றும் தொலைந்து போவது என்பது பயணங்களின் போதும் திருவிழா கூட்டங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் நடைபெறுகின்ற ஒன்றாக இருக்கின்றது. எனவே செல்போன்களை பயணங்களின் போதும் திருவிழாக்களின் போதும் கையில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 




திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயணங்களின் போதும் திருவிழாக்களின் போதும்  தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து தர அதன் உரிமையாளர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் அந்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைந்து போன மற்றும் திருடுபோன 75 செல்போன்கள் மீட்கப்பட்டது. இந்த செல்போன்களின் மதிப்பு சுமார் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனையடுத்து இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. 




இதில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் அவர்களது செல்போன்கள வழங்கினார். முன்னதாக செல்போன் உரிமையாளர்களிடம் உங்கள் செல்போன் திருடப்பட்டிருந்தால் எவ்வாறு திருடப்பட்டது என்று கூறினால் காவல்துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க கோவில் திருவிழாவின் போது செல்போன் திருடப்பட்டது குறித்து உரியவர் ஒருவர் காவல் கண்காணிப்பாளரிடம் கூறினார். மேலும் குறுகிய காலத்தில் 75 செல்போன்களை திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தது என்பது பாராட்டுக்குரியது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார். எனவே செல்போன் பயன்படுத்துபவர்கள் பயணத்தின் போதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் செல்போன்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கைகளில் செல்போன்களை வைத்திருப்பது என்பது சாலை மற்றும் தண்டவாளங்களின் ஓரங்களில் இருக்கும் திருடர்களால் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பயணங்களின் போது செல்போன்களை மிகவும் எச்சரிக்கையாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண