ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க கோரி தஞ்சையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் என்ற அமைச்சர் வாக்குறுதி அடிப்படையில் , ஊதிய ஒப்பந்தம் பேசி சம்பள உயர்த்த வேண்டும், பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான தொழிலாளர்களுக்கு உரிய பேட்டா வழங்க வேண்டும்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரம் தொழிலாளர்கள், பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 1977ஆம் ஆண்டு முதல் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு வந்தது நடைமுறையில் இருந்தது. தற்போது 14 வது ஊதிய ஒப்பந்தம்.   1.9 .2019 அன்று பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் நெருங்கிவிட்ட நிலையில் 14வது ஊதியத்திற்கு இன்னும்தீர்வு காணப்படவில்லை.

Continues below advertisement

அதிமுக ஆட்சியில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று, திமுக ஆட்சிக்கு  வந்த பின் கூட்டமைப்பு சங்கங்களை அமைச்சர் செப்டம்பர் 1 ஆம் தேதி அழைத்து பேசினார். பின்னர் 29.12.21 அன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டமைப்பு சார்பில்  14 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டு 21 முக்கிய பிரச்சினைகள தொகுத்து போக்குவரத்துத்  துறை அமைச்சரிடம்  அளிக்கப்பட்டது.அவரும் உடனடியாக ஊதிய ஒப்பந்தம் ,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக உறுதியளித்தார். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஒப்பந்தம்  இறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒப்பந்தம் பேசப்படாமல் காலதாமதப்  படுத்தப் படுவது தொழிலாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


உள்ளாட்சி தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் என்ற அமைச்சர் வாக்குறுதி அடிப்படையில் உடனடியாக ஊதிய ஒப்பந்தம் பேசி சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து கழகத்தின் கூடுதல் செலவின தொகைகளை உடனுக்குடன் வழங்குவது,பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான தொழிலாளர்களுக்கு உரிய பேட்டா வழங்கப்பட வேண்டும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உயர்ந்து விட்ட அகவிலைப்படி உயர்வு 73 மாத கால  தொகைகளை ஓய்வூதியத்துடன் இணைத்து ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், அதற்குரிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அரசு ஓய்வூதியர்களுக்கு அமுலில் உள்ளது போன்ற மருத்துவ காப்பீட்டு திட்டம், குடும்பநல நிதி திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கு பெற்றதற்காக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து, தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் திரும்பெறவேண்டும், கடந்த ஆட்சியில் தனியாருக்கு சாதகமாக விட்டுக்கொடுத்த நேரங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் கழக பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் மண்டலம் தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை புறநகர் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 

ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், கவுரவ தலைவர் கே.சுந்தரபாண்டியன், தலைவர் டி.தங்கராஜ், துணை தலைவர் ஜி.சண்முகம் ,ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன்,  சங்க நிர்வாகிகள் எம்.மாணிக்கம், எஸ்.மனோகரன், அ.சுப்பிரமணியன், சி.ராஜா மன்னன் ,அ.இரதயராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். இறுதியில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

Continues below advertisement