பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக, 50 நாட்களில் 50 பேரை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது மக்கள் ஆர்வத்துடன் அதிகமாக வந்ததால், 100 பேரை தேர்வு செய்து 100 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி, 11 வார்டில் வசிப்பவர், சோடா இரா.கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்திக்கு, கும்பகோணம், மடத்து தெருவும் ,காமாட்சி ஜோசியர் தெருவும் சந்திக்கும் பகுதியில் சிறிய கடையும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தனது கடையின் முச்சந்தி சாலை சந்திப்பில் கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பரான சத்தியநாராயணனை சந்தித்து, கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. தினந்தோறும், கும்பகோணம் பகுதியை, கொரோனா இல்லாத பகுதியாக்க வேண்டும், அனைத்து பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், அதற்கு அனைத்து மக்கள் சந்திக்கும் இடம் வேண்டும் என தெரிவித்தார். அப்போது, வேறு இடம் எதற்கு, கடை இருக்கும் ஒரு பகுதியில் சாமியானா பந்தல் போட்டு, முச்சந்தி தடுப்பூசி முகாம் நடத்துவோம் என இருவரும் பேசி முடிவெடுத்தனர். அனைத்து பொது மக்கள், பஸ்ஸில் செல்லும் பயணிகள் என அனைவரும் வந்து செல்லும் முச்சந்தி இடத்தில் தடுப்பூசி முகாம் அமைக்க முடிவெடுத்து, அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.
கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி தொடங்கிய முச்சந்தி தடுப்பூசி முகாம், 87 நாட்கள் கடந்த தொடர்ந்து முகாம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சுகாதார செவிலியர்கள், காலை முதல் மாலை வரை முகாமில் இருந்து வருபவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் தடுப்பூசி யாராவது போடாமல் இருந்தால், உடனடியாக செலுத்திக்கொள்ளுங்கள் என சாலையில் செல்பவர்களை அழைத்தும் தடுப்பூசி செலுத்தி வருகின்றார். இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழக அரசு, அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு முகாம்கள் நடத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலத்துவதை, ஒரு கடமையாக, தனது கடையின் ஒரு பகுதியை ஒதுக்கி, முச்சந்தி தடுப்பூசி முகாமை அமைதியாக நடத்தி வருகின்றார். தற்போது கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள பொது மக்களிடையை, முச்சந்தி தடுப்பூசி முகாம் பிரபலமாகி வருவதால், அனைவரும் கிருஷ்ணமூர்த்தியின் சேவையை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கொரோனா தொற்று முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை கும்பகோணத்தில் தான் தொடங்கியது. பொது மக்கள் அலட்சியமாக இருந்ததால், இரண்டாவத அலை தொற்று ஏற்பட்டது. பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்ற நோக்கத்துடன், எந்தவிதமா விளம்பரமும் இல்லாமல், பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றோம். மேலும், பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக, 50 நாட்களில் 50 பேரை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.ஆனால் பொது மக்கள் ஆர்வத்துடன் அதிகமாக வந்ததால், 100 பேரை தேர்வு செய்து 100 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. எனக்கு உறுதுணையாக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன், நகர நல அலுவலர் பிரேமா மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.