ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி பொருட்களை பெற நியாய விலைக்கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கான பொருட்களை கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் அதனை முன்னிட்டு தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அட்டைதாரர்கள் எந்த நியாய விலை கடையிலும் அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் கோதுமையினை விலை இன்றியும், இதர சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும். பிற மாநிலங்களிலிருந்து, இம்மாநிலத்திற்கு பணி நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களினாலோ வருகை தந்துள்ள வேறு மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள அட்டைதாரர்களுக்கு அவர் பொருள் பெற விரும்பும் நியாய விலை கடை வாயிலாக மத்திய வழங்கல் விலையான அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.3, கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ 2 என வசூல் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் மொத்தம் 1183 நியாய விலைக் கடைகளில் முதற்கட்டமாக கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டங்களில் செயல்படும் 435 நியாய விலைக்கடைகளில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பையோ-மெட்ரிக் முறையில் வரும் 2020 ஆம் ஆண்டு 16 ந் தேதி முதல் செயல்படுத்தப்படுத்தப்பட்டது. மேலும், படிப்படியாக மற்ற நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ரேசன் கடைகளில் உள்ள கைவிரல்ரேகை வைக்கும் இயந்திரத்திற்கு தேவையான இணைய தள வசதி கிடைக்காததால், பொது மக்கள் தினந்தோறும் ரேசன் கடைகளுக்கு அலைந்து வருகின்றனர்.இதே போல் பொங்கல் பண்டிகை முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இணையதள சேவை கிடைக்காததால், வேட்டி புடவைகளை வாங்க முடியாமல் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், ரேசன் கடைகளுக்கு என்று பிரத்யோகமாக இணைய தள வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்,சுவாமிமலை பகுதி கும்பகோணம் தாலுக்காவில் உள்ளது. இதன் புற நகர் பகுதியில் ரேசன் கடைகள் இருப்பதால், கைவிரல்களை வைத்தால், ஏற்றுக்கொள்வதில்லை. இணைய தள சேவை கிடைக்காததால், காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு போதுமான இணைய தள சேவை கிடைக்காததால், பொது மக்கள் தினந்தோறும் வந்து, காத்திருக்கின்றனர். இதில் நீண்ட நேரம் காத்திருந்து சிலர் மட்டும் வாங்கி செல்கின்றனர். இதே பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு வேட்டி புடவையை பொது மக்களுக்கு ரேசன் கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சுவாமிமலை பகுதியில் இணையதள சேவை கிடைக்காததால், பொங்கல் பண்டிகைக்கு வாங்க வேண்டிய வேட்டி புடவைகளை கூட வாங்க முடிய வில்லை.
மேலும் உணவு பொருட்களும் வாங்க முடியாததால், தினந்தோறும் ரேசன் கடைக்கு சென்று வருவதால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்..எனவே, மாவட்ட நிர்வாகம், கிராமப்புறங்கள், புறநகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைக்கு பிரத்யோகமாக இணையதள சேவை கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.