மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் கடந்த 5 -ஆம் தேதி பெலுசியா என்ற பெண் தனது கணவர் ஜான் கிறிஸ்டோபர் உதவியுடன் வீட்டில் மருத்துவர்கள் உதவி இன்றி சுயமாக  குழந்தை பெற்றெடுத்தார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் காவல்துறையினர் உதவியுடன் பெலுசியா மற்றும் அவரது குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு  அழைக்க முற்பட்டபோது அவர் செல்ல மறுத்துவிட்டார். 




மேலும், இதுகுறித்து சுகாதார துறையினர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் பெலுசியா, கணவர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயும் நலம் பாரம்பரிய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் ஆகிய மூன்று பேர் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 





இந்நிலையில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி, கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய மருத்துவத்தை அரசு சீரழிக்க நினைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் மாவட்ட ஆட்சியருக்கும், விவசாயிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினர் வெளியேற்றப்பட்டனர்.


மழைக்காலம் தொடங்கும் முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இரயில் மூலம் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைப்பு!


முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்து டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்யப்பட்ட  நெல் மூட்டைகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அரவைக்காக இரயில் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 




அதன்படி  2 ஆயிரம் மெட்ரிக்டன் கொண்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் 110 லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையம் எடுத்துவரப்பட்டு 42 இரயில்பெட்டிகள் மூலம் நாகை முதுநிலை மண்டல மேலாளர் ஆணைக்கிணங்க  அரவைக்காக திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டடுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை காலம் தூங்குவதற்கு முன்னதாக அரவைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Kakkan Grand Daughter : ”தாத்தா என் அம்மாவோட நகையெல்லாம் இவங்களுக்காக கொடுத்தாரு “ - கக்கன் பேத்தி சொன்ன சீக்ரெட்