மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா திருவிழந்தூர் ஏ.வி.சி.திருமண மண்டபத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. விழாவை, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் இப்புத்தக திருவிழாவில் இலக்கியம், தொல்லியல், அறிவியல், உளவியல், விளையாட்டு, கல்வி, ஆன்மீகம் உள்ளிட்ட பலவகையான புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரிமீயம் பெறுவதற்கான அரங்கம், மாவட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான செல்ஃபி பாயின்ட், மாவட்ட வேளாண் துறை சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கான கண்காட்சி உள்ளிட்ட அரங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த புத்தகத் திருவிழாவானது அக்டோபர் 10 துவங்கி அக்டோபர் 20 -ஆம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தக கண்காட்சி துவக்க விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ( உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் இடைவேளையின் போது கல்லூரி வாயில் முழக்க போராட்டம்.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 52 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி வாசலில் இடைவேளை நேரத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
TN Rains: வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கௌரவ விரிவுரையாளர்கள் சங்கீதா, பாரதி, புனிதா, விமலா உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த வாயில் முழக்க போராட்டத்தில் அரசாணை எண் 56-ஐ பயன்படுத்தி கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் எழுத்து தேர்வு முறையை கைவிட்டு, நேர்காணல் முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும், சட்டக்கல்லூரிகளில் 30,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வு உடனடியாக நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் கோரிக்கை விளக்க பதாகைகளை ஏந்தி தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் வகையில் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
IND vs RSA: தொடரை வெல்லுமா இந்தியாவின் இளம்படை? இன்று நடக்கிறது மூன்றாவது ஒருநாள் போட்டி..!