தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர் கனமழை தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த சேத்தூர் கிராமம் மிகவும் தாழ்வான பகுதியாகும். இப்பகுதி ஆண்டுதோறும் 1500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1200 ஏக்கரில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 300 ஏக்கரிலும் நடவு செய்வதற்காக பாய்நாற்றங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் நடவு செய்யப்பட்டு 20 நாட்களான பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் வடிகால், மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிய வழியில்லாத நிலையில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் செல்லும் மழை வெள்ளநீர் முழுமையாக வயல்வெளியில் பாய்வதால் தண்ணீரில் மூழ்கியுள்ள இளம் பயிர்கள் முழுவதுமாக அழுகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிராம குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளநீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதனால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக கிராம குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் உட்புகு முன்பு வாய்க்கால் உடைப்பை சரி செய்து தூர்வாரப்படாத வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வாரினால் மட்டுமே தங்கள் கிராமத்தையும், கடன் பெற்று பெரும் இன்னல்களுக்கு மத்தியில் செய்த விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் என்று அக்கிராம விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 3,517 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்
தொழில் முனைவர்களாக மாறும் பதிவேடு குற்றவாளிகள்-தஞ்சாவூர் எஸ்.பி.யின் மனிதாபிமான நடவடிக்கை