தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சையில் 11 மணிக்கே வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்களின் பார்வை தர்பூசணி, வெள்ளரிபிஞ்சுகள் பக்கம் திரும்பியது.

தஞ்சாவூர்: தமிழகத்தில் வரும் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வீ!சும். ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சையில் 11 மணிக்கே வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்களின் பார்வை தர்பூசணி, வெள்ளரிபிஞ்சுகள் பக்கம் திரும்பியது.
பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்தது.
Just In




நேற்று முன்தினம் 2ம் தேதி வரை தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும், மாநகர் பகுதிகளில் கனமழையும் பெய்ததால் வெப்பம் தணிந்து ஜில்லென்று கிளைமேட் மாறியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு விற்பனை மந்தமானது.
இந்நிலையில் வரும் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று 3ம் தேதி சூரியனின் வெப்பம் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆனால் இன்று காலை 10 மணி முதலேயே வெயில் அதிகம் இருந்தது. 11 மணி அளவில் வெயில் அதிகரித்ததால் மக்கள் தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு மற்றும் ஜூஸ் கடைகளின் பக்கம் பார்வையை திருப்பினர்.
இதையும் படிங்க: TN Weather: தமிழ்நாட்டில் இங்கே மழை, இங்கே வெயில் இருக்கும்.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
இதனால் கடந்த 2 நாட்களாக மந்தமாக இருந்த வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று வழக்கத்தை விட வெயில் அதிகம் இருந்தது. மக்கள் வீடுகளில் இருந்து புறப்படும் போதே குடையையும் மறக்காமல் எடுத்துச் செல்லும் நிலை உருவானது.
கடந்த 2 ம் தேதி வரை மழை பெய்ததால் ஜில்லுன்னு கொடைக்கானல் போல் இருந்தது தஞ்சை. இப்போ வெயில் கொளுத்துவதால் என்ன செய்யறதுன்னே தெரியலையே. இப்பவோ இப்படின்னா... இனி வரும் கோடையை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையே என்று புலம்புகின்றனர் தஞ்சை மக்கள்.
தற்போது தர்பூசணி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு சில வியாபாரிகள் மட்டும் மினி லாரிகளில் சிறிய அளவிலான தர்பூசணியை கிலோ ரூ.20க்கு என்று விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் வெள்ளரி பிஞ்சு விற்பனையும் அதிகரித்து வருவதால் விலையும் உயரத் தொடங்கி உள்ளது. சிறிய வெள்ளரி பிஞ்சுகள் கொண்ட கட்டு 5 எண்ணிக்கை தற்போதே ரூ.30க்கு விற்பனையாகிறது. வெயிலை சமாளிக்க மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் கிர்ணி பழங்கள் வருகை இன்னும் அதிகரிக்கவில்லை. தற்போது விற்பனையில் முன்னணியில் இருப்பது தர்பூசணி பழங்கள்தான். இதனை தஞ்சை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். குளிர்ச்சியான இந்த பழத்தின் தனி மவுசுதான் போங்க.