தஞ்சை- நாகை பைபாஸ் விளார் பாலத்தில் முன்னால் சென்ற ஸ்கூட்டர் பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் சிறுமிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களின் பெற்றோர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நல்லுாரை சேர்ந்தவர் செந்தில் குமார் (31), திருப்பூரில் மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (25), மகள் ஸ்ரீதர்ஷனி (7), ஸ்ரீதர்ஷனா (5). இவர்கள் 4 பேரும் தனது சொந்த ஊருக்கு வருவதற்காக, திருப்பூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு ஒரே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூர் - நாகை பைபாஸ் விளார் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி செந்தில்குமார் ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ஸ்ரீதர்ஷனி, ஸ்ரீதர்ஷனா இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த செந்தில் குமார், தேவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் நாகை செக்கடி தெருவை சேர்ந்த ஜீவன்ராஜ் (26) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,செந்தில்குமார், தனது மனைவி குழந்தைகளுடன் திருப்பூரிலிருந்து ஒரே ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். காலையில் புறப்பட்டு வந்ததால்,, பாலத்தின் செல்லும் போது, கவனமுடன் செல்லாமல், பின்னால் வரும் வாகனத்தை பற்றி தெரியாமல் சென்றார். அப்போது பின்னால் வந்த வேகமாக வந்த சரக்கு வாகனம், வேக வந்தது. செந்தில்குமார் ஸ்கூட்டரை சாலையில் ஒரத்தில் சென்று விடுவார் என வந்த போது, செந்தில்குமார் ஒரமாக செல்லாமல் சாலையின் நடுவில் வந்தார். இதனால் நிலைதடுமாறிய சரக்கு வாகனம் வேறு வழியி்ல்லாமல், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதிஷடவசமாக செந்தில்குமாரும், அவரது மனைவியில் காயத்துடன் உயிர் தப்பினர், அவர்கள் இருவரையும் தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைகாக அனுமதிக்கப்படனர். குழந்தைகள் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்ல கூடாது என சட்டம் இருந்தும், பஸ் கட்டணத்திற்காகவும், வேகமாக செல்ல வேண்டும் நினைத்ததால், தனது குழந்தைகளை செந்தில்குமார் இழந்துள்ளார். எனவே, இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவருக்கு மேல் செல்லக்கூடாது, ஹெல்மேட் அணிந்திருக்க வேண்டும், வாகன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், துாரமாக செல்லும் நேரத்தில் ஒய்வு எடுத்த செல்ல வேண்டும், பெரும்பாலும் அதிக துாரத்திற்கு செல்லும் போது, பஸ்களில் சென்றால் தான் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு என்றனர்.