UNESCO Award: யுனெஸ்கோவின் விருதை தட்டிச் சென்ற தஞ்சை துக்காச்சி கோயில் - எதற்காக தெரியுங்களா?

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக  யுனெஸ்கோ ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு விருது அறிவித்தது. 

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தொடர்ந்து குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோயில் புணரமைத்தாக கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் கலை நயமிக்க, அழகிய சிலைகள் அமைந்துள்ளது.
 
இக்கோயிலில் எந்த ஆண்டு இறுதியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது என தெரியாமல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலை கிராமமக்கள் முயற்சியாலும், இந்து சமய அறநிலையத்துறையாலும் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு செப். 3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக  யுனெஸ்கோ ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு சிறப்பு விருதை அறிவித்தது. 

இதுகுறித்து அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மறுமலர்ச்சி ஆகும். ஒரு காலத்தில் கைவிடப்பட்ட சமயத் தளத்திற்கு புதிய உயிர் கொடுத்துள்ளது, நவீன பாதுகாப்பு அறிவியலைப் பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளுடன் இணைக்கும் ஒரு இடைநிலை முறையையே பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் இந்து கோயில் கட்டுபவர்களின் அறிவாற்றல், ஸ்தபதி, உள்ளூர் கைவினைஞர் மரபுகளுக்கு ஏற்ப கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அலங்கார வேலைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோயிலை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதில், இத்திட்டத்தின் கல்வியியல் நோக்கங்கள் பாராட்டுக்குரியது. அரசு மற்றும் பக்தர்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு இந்த வரலாற்று கோவிலின் தொடர்ச்சியை நவீன கால பக்தி சூழலில் செயல்படுத்தியுள்ளது என அதில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement