தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா இன்னோவேஷன் இகோசிஸ்டமில் இருந்து 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் முக்கிய கண்டுபிடிப்பாக தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை மிக விரைவாக எடுத்துச் செல்லும் ட்ரோன் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது இந்த தயாரிப்புகளைத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் முன்னிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் அறிமுகம் செய்தார். இதில், தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான குறைந்த எடையுடைய டிரோன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பசுக்களுக்கு பசியை ஏற்படுத்தி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளச் செய்து கூடுதலாக பால் சுரக்கும் விதமான மூலிகை மருந்து, கல்வி பயன்பாட்டுக்கான நடமாடும் ரோபோ, நரம்பியல் பரிசோதனைக்கான பேஸ் பி மென்பொருள், ஆறு அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பயோ மெட்ரிக் பாதுகாப்பு பெட்டகம், மனித ஆற்றலை பயன்படுத்த முடியாத இடங்களில் ஆயிரம் கிலோ எடை வரையிலான பொருள்களைச் சுமந்து செல்லக்கூடிய தானியங்கி ரோபோ உட்பட என மொத்தம் 9 சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி
என்.நாகராஜன் | 11 Nov 2023 05:25 PM (IST)
இந்த டிரோனில் தட்பவெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக்கூடிய 3 டி பிரிண்டட் வசதியுடைய பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகளை மிக விரைவாக எடுத்துச் செல்லும் ட்ரோன்
Published at: 11 Nov 2023 05:25 PM (IST)