தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதி மக்களே உஷாரு... வரும் 13ம் தேதி மின் தடை செய்யறாங்க. அதனால விசிறியை தேடி பிடிச்சு எடுத்து வைச்சுக்கோங்க.

தஞ்சை பகுதியில் வரும் 13ம் தேதி  மின் தடை செய்யப்படுகிறது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 

தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் வரும் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே ஸ்டேடியம் பீடரில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரஹாம் பண்டிதர்நகர், திருநகர், வெங்கடாசலபதி நகர், உமாசிவன்நகர், முருகன் நகர், மல்லிகைபுரம் ஆகிய பகுதிகளில் வரும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், திலகர் திடல் பீடரில்  மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம் பகுதிகளிலும், வண்டிக்கார தெரு பீடரில் ரயிலடி, சாந்த பிள்ளைகேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், விபி கோயில், சேவியர் நகர், சோழன் நகர் பகுதிகளிலும், சர்க் யூட் ஹவுஸ் பீடரில் ஜிஏ கெனால் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் பகுதிகளிலும், மார்க்கெட் பீடரில் பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டு மந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளிலும் காலை முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலும் கீழவாசல் பீடரில் பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழையபேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம் பகுதிகளிலும், விஓசி நகர் பீடரில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன், வஉசி நகர், மைனர் ஜெயில் ஆகிய பகுதிகளிலும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.