தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் மின்நகர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் 11- கே.வி.உயரழுத்த மின்பாதைகளில் நாளை 13ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
இதனால் இங்கிருந்து மின்மினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது. அதன்படி வல்லம், சென்னம்பட்டி, மின்நகர், ராமலிங்கபுரம். பிளளையார்பட்டி சுற்றுவட்டார பகுதியான கயிறுபோர்டு, எம்ஜிஆர் நகர், பாரிஸ்நகர், கார்த்திக்நகர், கலைமகள் பள்ளிக்கூடம் ஆகியபகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேலும் இவ்வாறு ஏற்படும் சிரமத்தை பொறுத்து ஒத்துழைப்பு நல்குமாறு வல்லம் பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை உதவி பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.