தஞ்சையில் போலீசாரின் உடமைகளை ஆய்வு செய்த டிஐஜி

வாகனங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்படுவது, எரிபொருள் பயன்பாடு போன்றவற்றை ஆய்வு செய்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாரின் உடமைகளை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் ஆய்வு செய்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீஸார் பயன்படுத்தும் வாகனங்கள், அவர்களின்  துப்பாக்கிகள் உட்பட பல்வேறு உடமைகள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான ஆய்வு இன்று நடைபெற்றது. இதற்காக தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாரின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன.


போலீஸ் வேன், ஜீப், கலவர பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. இதனை தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களின் ஆவணங்களையும் அவர் சரிபார்த்தார். 

அப்போது அந்த வாகனங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்படுவது, எரிபொருள் பயன்பாடு போன்றவற்றை ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களின் பதிவேடுகளையும் டிஐஜி., ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். பின்னர் அவர் தொடர்ந்து போலீசாரின் கவாத்து மற்றும் உடமைகளையும் ஆய்வு செய்தார்

Continues below advertisement