தஞ்சாவூர் மாவட்டத்தில், செயற்கை உரங்களை விற்பதில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தியும் கள்ளச்சந்தையில் கண்மூடித்தனமான அதிக விலைக்கு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கின்றது. இது போன்ற மோசடிகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளின் செயல்களை கண்டித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விவசாயிகள் தலையில் சாக்குப் பைகளை தலையில் முக்காடிட்டு, கண்களில் கருப்பு துணியை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட சுமார் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் சம்பா தாளடி நெற்பயிர்களின் நிலை மோசமானதால், அப்பயிர்களை காப்பாற்ற செயற்கை உரமான டிஏபி, பொட்டாஷ், காம்பளக்ஸ் போன்ற உரங்களை, பயிர்களுக்கு தெளித்து காப்பாற்றி வருவார்கள். தென்மேற்கு வடகிழக்கு பெருமலை நீர் தொடர்ந்து சம்பா தாளடி பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தப்பித்த பயிர்களுக்கு மிக மிக அவசியமாக செயற்கை உரங்களான டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவைகள் உரங்கள் தேவைப்படுகிறது.
உரங்களை தேவையான அளவிற்கு தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும். ஆனால், வெளிச்சந்தையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள், மறைமுக லஞ்ச ஒப்புதலோடு, அனைத்து வகை உரங்களையும், அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தடுத்திட வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாக, காவிரி சமவெளி மாவட்ட விவசாயிகள், விடுத்து வருகின்ற கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளிப்பதோடு, வெட்கக்கேடாகியுள்ளது.
டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் எந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மிக அரிதாக கிடைக்கின்ற அதே வேளையில் அனைத்து தனியார் கடைகளில் கள்ளச்சந்தையில் வரம்புக்கு மீறி அதிக விலை உயர்வுடன், தேவையற்ற இதர பொருட்களையும் விவசாயிகள் வாங்கி கட்டாயப்படுத்துகின்றனர். செயற்கை தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி, விவசாயிகளை ஏமாற்றி மோசடியாக விற்கப்படுவதை வேளாண்மைத்துறையும் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை அச்சிடப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ள, மாவட்ட நிர்வாகம், மாநில தொழிலாளர் நலத்துறையும், கையூட்டு பெற்றுக்கொண்டு கண்மூடி கொள்வதோடு, தனியார் வியாபாரியிடம் கொத்தடிமையாக இருக்கின்றார்கள். இதனை விவசாயியான நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த ஆண்டு குறுவை சம்பா, தாளடி சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட அதிக விழுக்காடு என இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு அதற்கு ஏற்றார் போல் தேவையான உரங்களை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தவறிவிட்டது. விவசாயிகளின் நிலையை மத்திய மாநில அரசுகள் உணரவேண்டும். சம்பா,தாளடி பயிர்கள் மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டுமெனில் மிக உரங்கள் மிக அவசியமாகும். ஆனால், 1040 விலையுள்ள ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், 1700 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இது போல் அனைத்து உரங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம், இதனை விவசாயிகளுக்கு, தெளிவுபடுத்துவது, தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கிடைக்காத பொழுது தனியார் கடைகள் மட்டும் வரம்புக்கு மீறிய விலைக்கு விற்கப்பட்டு வருவதற்கு யார் காரணம் என்பதை தமிழக அரசு விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.உரிய விளக்கங்களை விவசாயிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். ஆனால் உரங்கள் இல்லாத பயிர்கள் கேட்டுக் கொள்ளுமா.மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து பயிர்களும் நாசமாகிவிடும்.
எனவே, மத்திய மாநில அரசுகளுக்கு, அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதால், பாதிப்புக்குள்ளான, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் நிலையை உணர வேண்டும் என்பதை, உணர்த்தும் விதமாக, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க, விவசாயிகள் கண்களில் கருப்பு துணியை கட்டி, அதிக விலை கொடுத்து வாங்கிய ஒரு மூட்டை சாக்குகளை தலையில் கவிழ்த்து, கும்பகோணம் ஆர்டிஒ அலுவலகம் முன்பு கண்டன கோஷமிட்டும், கோரிக்கை மனு அளித்தனர். இந்த நூதன போராட்டத்திற்கு செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் தலைமை வகித்தார். இதில் ஆதிகலியபெருமாள், சுவாமிநாதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர், கோரிக்கை மனுவை தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர், அனுப்பி வைத்தனர்.