தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை அடுத்த கீழதிருப்பந்துருத்தி நடுப்படுகை சேர்ந்தவர் ஓந்தன் மகன் நீலமேகம் (57) இவரூக்கு தமிழ்ச்செல்வி (50) என்ற மனைவியும், திவாகர், தினேஷ் என்ற மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யாவுக்கு திருமணமாகிவிட்டது. திவாகர், தினேஷ் ஆகிய இருவருக்கும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். நீலமேகத்துக்கு வாழை தோட்டத்தில், வாழை இலை அறுக்கும் தொழில் செய்து வருகின்றார். காலை ஒரு வாழை தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றுள்ளார். நீலமேகத்தின் சகோதர் நடுப்படுகை சேர்ந்த குருசாமி மகன் மதிவாணன் (32). இவரும் வாழை இலை அறுக்கும் தொழில் செய்து வருகிறார். மதிவாணனும், நீலமேகம் இருவரும் காலையில் தனித்தனியாக பக்கத்தில் உள்ள தோட்டத்தில் வாழை இலை அறுத்துக் கொண்டு இருந்துள்ளனர். மதிவாணன் அடிக்கடி தனது சித்தப்பா மதிவாணனிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.
அப்போது சித்தப்பா நீலமேகத்திடம் பொங்கல் செலவுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் வேண்டும் என்று மதிவாணன் கேட்டுள்ளார். இப்போது பணம் இல்லை என்றும் நீலமேகம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மதிவாணன், பொங்கல் விழாவிற்கு தேவையான செலவு செய்ய பணம் இல்லாததால் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் போய் விடுமோ என்ற ஆத்திரமடைந்த மதிவாணன், மண்வெட்டி கட்டியால் நீலமேகத்தை ஓங்கி அடித்துள்ளார். இதில் நீலமேகம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதை பார்த்த மதிவாணன், சித்தப்பாவை கொலை செய்ததால், தனக்கு ஊரில் அவப்பெயர் ஏற்பட்டு, தொல்லைகள் அதிகரிக்கும் என்ற நினைத்த மதிவாணன், பயந்து போய், அங்குள்ள வாழை தோட்டத்தின் கொட்டகையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தில் வேலை பார்த்தவர்கள் வந்து பார்த்து நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று நீலமேகத்தின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மதிவாணனை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக நீலமேகத்தின் மனைவி தமிழ்ச்செல்வி (50) கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.