தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10, 11, 12, 13வது வார்டுகளின் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் துவக்கி வைத்தார்.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகள் துறை, மாநகராட்சிக்கு ஒட்டியுள்ள பஞ்சாயத்து, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 13 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்படும்.
இந்த அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு 11 வது வார்டு 12 வது வார்டு 13 வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கும்.
இதில் அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகள் துறை, மாநகராட்சிக்கு ஒட்டியுள்ள பஞ்சாயத்து, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 13 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட்டன.
இந்த அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மக்களுடன் முதல்வர் முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இந்த முகாமில் 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் புண்ணியமூர்த்தி, 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாலா, 12 உறுப்பினர் வெங்கடேஷ், 13 வது வார்டு மாம் என்ற உறுப்பினர் சுகாசினி முரளி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.