தஞ்சாவூர்: தங்கள் குழந்தைகள் வளர்த்த வளர்ப்பு நாய் உடல் நலக்குறைவால் இறந்து விட கண்ணீர் விட்டு அழுது மனிதர்கள் இறந்தால் எப்படி ஐஸ் பாக்ஸ்சில் வைப்பார்களோ அதேபோல் வைத்து குடும்ப உறவினர்கள் பிரார்த்தனை செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளனர் தஞ்சையை சேர்ந்த முதிய தம்பதி.

நாய்கள் மீது பாசம் காட்டுவது என்பது அவற்றிற்கு அன்பு, அரவணைப்பு, விளையாட்டு, மற்றும் தேவையானவற்றை வழங்குவது ஆகும். நாய் மீது பாசம் காட்டுவது என்பது, அவற்றின் உடல் மற்றும் மன நலனைப் பேணுவது என்று தங்களின் குழந்தைகள் போல் வளர்க்கும் எஜமானர்கள்  அதிகம் உள்ளனர். இது வளர்ப்பு நாய்க்கும் உரிமையாளர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்துகிறது. 

நாய்கள் தங்கள் உரிமையாளர்களுடன் அரவணைக்க விரும்பும். நன்றி விசுவாசத்தில் நாய்கள் போன்ற மற்ற எந்த வளர்ப்பு உயிரினங்களும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாதுகாப்பு, அரவணைப்பு என்று நாய்கள் தங்களின் உரிமையாளர்கள் மீது நீங்கள் அவர்களுடன் அரவணைக்கும் போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர வைக்கும் மற்றும் உங்களுடனான பிணைப்பை பலப்படுத்தும். 

நாய்கள் விளையாடுவதை மிகவும் விரும்பும். முக்கியமாக தங்களை வளர்க்கும் உரிமையாளர்களுடன் உற்சாகமாக ஓடியாடி விளையாடும். உரிமையாளர்கள் குரலுக்கு கட்டுப்படும் குணம் கொண்டவை, நன்றி விசுவாசத்திற்கு இவை போன்ற மற்ற வளர்ப்பு பிராணிகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதேபோல் நாயை வளர்க்கும் உரிமையாளர்கள் அவற்றுடன் விளையாடும் போது மனதில் உள்ள இறுக்கம் காணாமல் போய்விடும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மன அழுத்தத்தையும் குறைக்கும். நாய்கள் நேர்மறை வலுவூட்டலுக்கு நன்கு பதிலளிக்கும். வீட்டில் உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் போர் வீரர்கள் போல் வளர்ப்பு நாய்கள் செயல்படும். விஷ ஜந்துகளிடம் இருந்து உரிமையாளர்களை காப்பாற்றி தங்களின் உயிரை இழந்த நாய்கள் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்திருப்போம். 

தங்களின் உயிரை பற்றிக்கூட அக்கறை கொள்ளாமல் தங்களின் நல்ல நடத்தையை வெளிப்படுத்தி உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றும் தன்மை கொண்டவை. நாய்கள் தங்கள் உரிமையாளர்களிடமிருந்து கவனத்தை ஈர்க்கின்றன. எனவே, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, அவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வது போன்றவை நாய் வளர்ப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். இதனால்தான் நாய்கள் வளர்ப்பவர்கள் அதை தங்களின் குழந்தைகள் போல் வளர்க்கின்றனர். அதனுடன் விளையாடுவது, பேசுவது, நடைபயிற்சி செய்வது என்று பலவகையிலும் தங்களின் குடும்ப உறுப்பினர் போலவே நடத்துகின்றனர்.

அந்த வகையில் பிள்ளை போல் வளர்த்த  வளர்ப்பு நாய் உடல் நலக்குறைவால் இறந்ததும், வருந்துகிறோம்  Rest in peace என்று ப்ளக்ஸ் வைத்து தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி இறந்த 7 வயது பிரவுனி எனும் பெண் டாபர்மேன் நாயை மனித உடல்களை போல் ஐஸ் பாக்ஸ்சில் வைத்து  குடும்ப உறவினர்கள் வந்ததும் பிராத்தனை செய்து தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்துள்ளனர் தஞ்சையை சேர்ந்த முதிய  தம்பதி.

தஞ்சை  ரஹ்மான் நகரை சேர்ந்தவர்கள் பெர்ணான்டோ - பிச்சையம்மாள் தம்பதி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். இவர்கள் பிரவுனி என்கிற பெண் டாபர்மேன் நாயை கடந்த 7 வருடமாக மிகவும் பாசமாக  வளர்த்து வந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பிரவுனி இறந்து விட்டது. இதனால் மிகவும் மன வேதனையடைந்த பெர்ணான்டோ – பிச்சையம்மாள் தம்பதி தங்கள் வளர்ப்பு நாய் இறந்ததை தெரிவிக்கும் விதமாக பிளக்ஸ் வைத்து இறந்த நாயை ஐஸ் பாக்ஸில் வைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர். 

கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்தனர். இந்த பெர்ணான்டோ – பிச்சையம்மாள் தம்பதியின் இந்த செயலுக்கு தஞ்சை மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தது.