நாகை அருகே விதியை மீறி இயக்கப்பட்ட டாடா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 16 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

 


நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கை ஊராட்சி பெருந்தலைக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்புறம் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பொதுமக்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் தலைகீழ் கவிழ்ந்து வாகனத்தின் சக்கரம் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது.



 

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 16 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை 4 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரக்கு வாகனத்தில் சரக்கு மட்டுமே ஏற்றவேண்டும் என விதி உள்ள நிலையில் மனிதர்களை ஏற்றி சென்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு வாகனத்தையும் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண