தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமை வகித்தார். இதில்  அனைத்து துறை அதிகார்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களது குறைகளை கூறுவதற்காக மனுக்களாக எழுதி வந்திருந்தனர். கூட்டத்தில், பூதலுார் தாலுக்கா சித்திரக்குடி, புதுக்கல்விராயன் பேட்டையை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகள் பவித்ரா (13). காதுகேளாத இவர், பூதலூார் அரசுபள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டிற்கு முன்பு, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில், பவித்ராவை ஆய்வு செய்த மருத்துவர்கள், காது கேட்காமல் இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து பவித்ராவிற்கு நவீன காது கேட்கும் கருவியை இலவசமாக வழங்கினார். அதன் பின்னர், மாணவி பவித்ரா, பள்ளிக்கு சென்று வந்தார். சில நாட்களுக்கு பிறகு, பவித்ரா, பயன்படுத்தி வந்த காது கேட்கும் கருவி பழுதானது. அதனை தொடர்ந்து, பள்ளி மற்றும் நண்பர்களுடன் காது கேட்காமலேயே சென்று கொண்டும், பழகி வந்தார்.




இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ந்தேதி பள்ளிகள் அனைத்து திறக்கப்பட உள்ள நிலையில், பவித்ரா காது கேட்கும் கருவியை சீர் செய்ய வேண்டும், அந்த நிறுவனத்திடம் கேட்கும் போது, 6 லட்சம் செலவாகும் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா, மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ள மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையினரிடம் பல முறை, புதிய காது கேட்கும் கருவியை வழங்க வேண்டும் அல்லது பழைய காது கேட்கும் கருவியை பழுது பார்த்த தர வேண்டும் என மனு அளித்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்ககாததால், மக்கள் குறை தீர்க்கும் நாளை முன்னிட்டு பவித்ரா தனது தெட்சிணாமூர்த்தியிடன், மனு அளித்தார். அப்போது பவித்ராவும் அவரது தந்தையும், கடந்த 5 ஆண்டுகளாக பல அதிகாரிகளிடம் காது கேட்கும் கருவி குறித்து கேட்டு யாரும் உரிய பதில் கூறாமல் உள்ளனர். விவசாயியான நாங்கள் புதிய காது கேட்கும் கருவியை 6 லட்சத்திற்க வாங்க முடியாது. பள்ளிகூடம் திறக்க உள்ள நிலையில், அனைத்து மாணவர்கள் மத்தியில் இருக்கும் போது,  காது கேட்காததால், மிகுந்த மன உளைச்சல் ஏற்படும். அதனால் எனது கல்வி பாதிக்கும்.எனவே, காதுகேட்கும் கருவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மிகவும் கெஞ்சியபடி வேண்டுகோள் விடுத்தார்.




இத குறித்து பவித்ரா, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில்,


எனக்கு காது கேட்காது, விவசாய கூலியான எனது தந்தை தெட்சிணாமூர்த்திக்கு கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளார். இது போன்ற நிலையில் அன்றாடம் கூலி வேலை பார்த்து, எங்களது குடும்பத்தையும், எனது மருத்துவச்செலவையும் கவனித்து வருகின்றார். தற்போது புதிய காது கேட்கும் கருவி  5,58,600 விலையாகின்றது. இவ்வளவு தொகை கொடுத்து எனது தந்தையால் கருவியை வாங்க முடியாது. மிகவும் ஏழ்மையிலுள்ள எனக்கு காது கேட்கும் கருவி மற்றும் மருத்தவ சிகிச்சையை, தமிழக அரசின் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கி, எனது கல்வி பாதிக்காத வகையில் வழங்கிடவேண்டும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.