தஞ்சாவூர், தென்றல் நகரை சேர்ந்தவர் சுயம்பிரகாசம். ஒய்வு பெற்ற தபால் துறை அதிகாரி பணியாற்றியவர். இவரது மனைவி பார்வதி (74) இவருக்கு சத்யநாராயணன் என்று மகன் உள்ளார். இவர் கடந்த 42 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 32 வருடமாக, இவரது வீட்டின் இருபுறங்களிலுள்ளவர்கள் பல்வேறு இடையூர்களை செய்து வருகின்றார்கள். இதனால் பாட்டி பார்வதி, கலெக்டர், எஸ்பி, டிஎஸ்பி என அனைவரிடமும் புகார் அளித்து, அதன் பேரில் அப்பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பார்வதி, உடலநலக்குறைவாக உள்ள தனது மகன் சத்யநாராயணனுக்கு மாத்திரைகள் வாங்குவதற்காக, தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரிக்கு சென்றார். அப்போது. வீட்டின் அருகிலுள்ள, பார்வதியின் வீட்டின் சுவரில் ஏறி குதித்து, சாரம் அமைத்தும், பல்வேறு பொருட்களை போட்டு, வீட்டை சுற்றி செல்ல முடியாதவாறு செய்தனர். இது குறித்து பார்வதி, அவர்களிடம் கேட்ட போது, தரக்குறைவாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பார்வதி, தனது மகன் சத்யநாராயணனுடன், தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லுாரிக்கு புகாரளிக்க சென்றனர். ஆனால் காவல் நிலையத்தில் டிஐஜி மற்றும் எஸ்பி வந்ததால், போய் விட்டு நாளை வா என்று திருப்பி அனுப்பினர். இதனால் வீட்டிற்கு பயந்து செல்ல முடியாத பார்வதியும், மகனுடன் கதறி அழுது
கொண்டே கண்ணீருடன் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்தார். இதனையறிந்த போலீசார், உயரதிகாரிகள் உள்ளே இருக்கும் போது, கதறி அழுது செல்லும் பார்வதியை அழைத்து புகாரை பெற்று கொண்டு, மனு ரசீது கொடுத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனுப்பி வைத்தனர். இது குறித்து பார்வதி கூறுகையில், நானும் எனது கணவர் சுயம்பிரகாசமும், மாற்று சமூகத்தில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் சுயம்பிரகாசம் என்னை விட்டு சென்று விட்டார். தற்போது எனது வீட்டில் நானும், எனது மகன் சத்யநாராயணன் மட்டும் வசித்து வருகின்றோம். எனது வீட்டின் இருபுறங்களிலுள்ளவர்கள் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். என வீட்டின் வளாகத்திற்குள், இறைச்சி, மீன் கழிவுகளை கொட்டி கொடுமைப்படுத்துகின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால், தகாத வார்த்தைகளால் பேசி, எங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். இதனால் தினந்தோறும் உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனது ஒரு புறத்திலுள்ளவரின் மனைவி தஞ்சையில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருவதால், என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி கொலை மிரட்டுகின்றார். மற்றொரு பக்கத்தில் உள்ளவரின் மனைவி, தினந்தோறும் மூன்று பெண்களை அழைத்து வந்து அலங்கரித்து, உணவு வழங்கி, வீட்டின் தெருவின் எல்லைக்கு வரும் ஆட்டோவில், தகாத தொழிலுக்கு அனுப்பி வருகின்றார். அந்த வீட்டில் தினந்தோறும் கூத்தும் கும்மாளமாக, சத்தமாக இருக்கும். இதனால் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை துன்புறுத்தினால், எங்களுக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள், என்பதற்காக, வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் இது போன்ற தகாத செயல்களை செய்து வருகின்றனர். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும், உடல்நலமில்லாமல் உள்ள எனது மகன், வசிப்பதற்கு வாழ்வளிக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்ததாக கதறி அழுது கொண்டே கண்ணீருடன் கூறினார்.