தஞ்சாவூர்: பதவிக்காலம் முடிய 20 நாட்கள் இருக்கும் போது திடீரென்று தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தமிழக ஆளுனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் பதவிக் காலம் முடிவதற்கு 20 நாள்களுக்கு முன்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வி. திருவள்ளுவன் கடந்த 2021ம் ஆண்டு டிச.13ம் தேதி பொறுப்பேற்றார். மூன்றாண்டுகள் கொண்ட இப்பதவிக் காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய இருந்தது.


அதாவது துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பதவிக்காலம் முடிவடைய 22 நாள்கள் இருந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவள்ளுவன் சென்றார். அப்போது, அவரிடம் தமிழக ஆளுநரின் உத்தரவின்படி, விசாரணையை முன்னிறுத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார் கையொப்பமிட்ட கடிதம் வழங்கப்பட்டது.


இந்தக் கடித நகல் தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துக்கும் வந்தது. இதையடுத்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வந்த திருவள்ளுவன் தன்னுடைய உடமைகளை எடுத்துச் சென்றார். இந்தப் சஸ்பெண்ட் உத்தரவை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளதால், அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.


சஸ்பெண்ட், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆளுநர் மாளிகை, நடவடிக்கை