நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சிலர் தத்தாங்குடி வெட்டாற்றில் கரையில் இருந்து அரசு அனுமதியின்றி திருட்டு தனமாக மணல் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 4 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தல் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம தற்காலிக உதவியாளர் அம்பேத்கர் மணல் கடத்தல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணல் கடத்தல் கும்பல் அம்பேத்கர் மீது நேற்றைய தினம் கொலைவெறி தாக்குதலில் நடத்தியுள்ளனர் இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து உள்ளது. படுகாயம் அடைந்த அம்பேத்கர் நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கோகூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் அவரது சகோதரர் முகேஸ் உள்ளிட்ட கும்பல் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட அம்பேத்கரின் தாய், சகோதரர், மனைவி, கைகுழந்தை என உறவினர்கள் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீகுளிக்க முயற்சித்தனர். அப்போது ஆட்சியர் வளாகத்தில் பணியில் இருந்த நாகூர் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர்களை தடுத்து மன்னனை கார்களை பறிமுதல் செய்தனர். அப்போது ஆவேசம் அடைந்து தரையில் விழுந்து புரண்டு நியாயம் கேட்ட பெண்மணி மயக்கமடைந்தார் இதனால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டது.
மணல் கடத்தலில் தொடர்புடைய தாக்குதலில் ஈடுபட்ட கோகூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு என்கிற கோபாலகிருஷ்ணன், மகேஷ், உள்ளிட்ட கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு புரண்டு கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இவர்கள் குற்றம் சாட்டும் எதிர்த்தரப்பை சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு, மகேஷ், குஞ்சப்பன், தங்கம் உள்ளிட்டோர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.