தமிழகத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில், போலியான நகைகள் உள்ள நிலையில், இதே போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களிலும் போலியான, தரமற்ற உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது தைப்பொங்கல்  விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு வீடுகளில் வர்ணம் அடித்து, மண் அடுப்பு கட்டி, புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பின்னர் குடும்பத்துடன் கரும்புகளை சாப்பிடுவார்கள். சிறப்பு  பெற்ற பொங்கல் விழாவிற்கு பிரதானமான கரும்பு கும்பகோணத்தை அடுத்த அணக்கரை, கடிச்சம்பாடி, நீரத்தநல்லுார், சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம், திருவையாறு உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்துள்ளனர்.


தற்போது விழா காலம் தொடங்கவுள்ள நிலையில் கரும்புகளை வெட்டி,  விற்பனை செய்வதற்காக திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சை பகுதியில் குவித்து வைத்துள்ளனர். பொங்கல்  விழாவிற்காக கடந்த ஏப்ரல் மாதம் விதைத்து, பின் 8 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்து,  சுத்தம் செய்து விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ளனர். கடந்தாண்டுகளில் 10 எண்ணிக்கையை  கொண்ட கரும்பு கட்டின் விலை ரூ. 150 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 10 எண்ணிக்கையை  கொண்ட கரும்பு கட்டின் விலை ரூ.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.




இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் தொகுப்பு பொது மக்கள் வழங்கும் போது, கரும்பு வழங்கிறார்கள். அதனால் இப்போதைய கரும்பு சாகுபடி செய்துள்ள பகுதியில் அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூலம் விலை பேசி வருகின்றார்கள். இதனால் கடந்தாண்டுகளை விட இந்தாண்டு கரும்பு கட்டின் விலை கிடு கிடு என உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு பேசி. கூடுதலாக விலை நிர்ணயம் செய்வதால், அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு கரும்பு கட்டுக்களை, விவசாயிகளிடம் லாபம் தரும் வகையில் விலையை நிர்ணயித்து, அதனை வாங்கி பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இது குறித்து விவசாயிகள்  கூறுகையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து பொது மக்கள் விரும்பி கரும்பு சாப்பிடுவார்கள். தமிழக அரசு  சுமார் ஓன்றே கால் கோடி மக்களுக்கு இலவசமாக  கரும்பு  துண்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரிடையாக கொள் முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள் முதல் செய்வதால், அதிக விலைக்கு வாங்க நிலை ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.


தற்போது பொங்கல் விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை, இடைத்தரகர்களிடம் மூலம் பேசி விலை நிர்ணயித்துள்ளனர். இதனால் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு கரும்புகளை வாங்கும் போது, 10 எண்ணிக்கையிலான கரும்பு கட்டின் விலை ரூ. 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வரும் பொங்கல் தினத்தன்று கட்டின் விலை ரூ. 500 க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும். மேலும், தரமில்லாத கரும்புகளை தமிழக அரசு வாங்குவதால், கரும்பை எந்த மக்களும் விரும்பி வாங்குவதில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கடமைக்காக பொங்கல் கரும்புகளை  தந்து விட்டு சென்று விடுவார்கள்.   இது வரைக்கும் கரும்பு வாங்குவது குறித்தும்  கொள் முதல் செய்வதும் குறித்தும் கணக்குகள் காட்டுகிறார்களா என தெரிய வில்லை.




வெல்லத்தை, வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களிடமிருந்து நேரிடையாக வாங்க வேண்டும், ஆனால் கமிஷனுக்காக ஜீனியை வழங்குகிறார்கள். தமிழகத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில், போலியான நகைகள் உள்ள நிலையில், இதே போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களிலும் போலியான, தரமற்ற உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது. இதில், பல கோடி ரூபாய் வரை, அமைச்சர்கள், தலைமை செயலாளர் முல் தரை மட்டம் அலுவலர்கள் வரை கமிஷன் செல்லுவது, கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்ததை, இந்தாண்டு நடைபெறாமல் இருக்க முதல்வர் கவனத்தில் எடுத்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படாமலிருக்க நடவடிக்கை வேண்டும்  என்றார்.