மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் கவிதா தம்பதியரின் மகள் ஆர்த்திகா மாணவி உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் தங்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஆர்த்திகாவின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

Continues below advertisement

மத்திய, மாநில அரசுகளின் முயற்சியில் ஆர்த்திகா இன்று மயிலாடுதுறை கோவாஞ்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக வந்தடைந்தார். வீடு திரும்பிய மாணவி ஆர்த்திகாவை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற அருட்செல்வன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Continues below advertisement

அதனை தொடர்ந்து இதுகுறித்து மாணவி ஆர்த்திகா கூறுகையில், கார்கியுவில்  இருந்து போலந்து பார்டருக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். டிரான்ஸ்போர்ட் வசதி இல்லாததால் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களிடம் இருந்த பணத்தைகொண்டு தனியார் வாகனத்தில் சென்றாலும் எல்லை வரை இந்தியர்களை அவர்கள் கொண்டுவிடவில்லை. பல கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக இறக்கி விட்டுவிட்டனர். இரவு நேரத்தில் செல்போன் வெளிச்சத்தில் பல கிலோ மீட்டர் தூரம் மைனஸ் 2 டிகிரி குளிரில் நடந்து சென்றோம். 

ஒரு மாசம் ஆச்சு... நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன? இதை செய்யுங்கள்” - அரசை வலியுறுத்தும் ராமதாஸ்

உக்ரைனை விட்டு போலந்து எல்லைக்கு சென்ற பிறகு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியன் எம்பசியில் நன்றாக கவனித்து கொண்டனர். உக்ரைன் எல்லையை கடப்பது மிகவும் சிரமாக உள்ளது. அதற்கு எதாவது உதவி செய்தால் இந்தியவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்னுடன் நூறு மாணவர்கள் வந்தார்கள். விமானம் மூலம் டில்லி வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டோம் அங்கேயும் தமிழக அரசு நன்றாக கவனித்து கொண்டது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நல்லமுறையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என்னைபோன்று இன்னும் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை விரைவாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் மருத்துவம் இறுதியாண்டு படிக்கிறேன் ஆகையால் இந்தியாவிலேயே எனது படிப்பை தொடர்வதற்கு மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

விழா கோலத்தில் காஞ்சிபுரம்..! ஏகாம்பரநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர விழா