நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ராமேஸ்வரத்தில் இருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடும் திடீரென்று கோடியக்கரைக்கு ரோவார் கிராப்ட்  கப்பல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 



 

இலங்கையில் இருந்து வேதாரண்யம் வழியாக தங்கம் கடத்தும் நபர்களை பிடிக்க இந்த கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளதா அல்லது எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்க இந்த கப்பல் வர வழைக்க வைக்கப்பட்டுள்ளதா அல்லது இலங்கையில் தற்பொழுது நிதி நிலைமை மோசமாகி கடும் வறட்சி ஏற்பட்டுள்ள  நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக மக்கள் எவரேனும் வேதாரண்யம் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தால் அதற்கான பாதுகாப்பை பலப்படுத்த அந்த கப்பல் வந்துள்ளதா என அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

 



 

இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகளிடம் கேட்டபொழுது வழக்கமான ரோந்து பணிக்காக மட்டுமே இந்த கப்பல் வந்துள்ளதாக தெரிவித்தனர். ரோவர் கிராப்ட் கப்பலில் இருந்து பணிக்கு வந்த வீரர்களும் கடலோர காவல் படை வீரர்களும் ஆலோசனை நடத்தினர். திடீரென்று ரோவர் கிராப்ட் கோடியக்கரையில் முகாமிட்டு இருப் பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.