நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கிழக்கே நடுக்கடலில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 புஷ்பவனம் மீனவர்களை ரப்பர்கட்டை, இரும்புபைப் வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கி 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் ஜிபிஎஸ்கருவி பேட்டரி ஆகியவற்றை பறித்து கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள மீனவர்களை விரட்டியடித்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வது வழக்கம். வழக்கம்போல புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்பவருடைய பைபர் படகில் பன்னீர்செல்வம் நாகமுத்து ராசேந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்று உள்ளனர்.இவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர்; படகில் ஏறி புஷ்பவனம்; மீனவர்களை ரப்பர்கட்டை, இரும்புபைப் மற்றும் வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கினர்.
300 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை அறுத்துக் கொண்டு ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, கடலில் மீன்இருக்கும் இடத்தை காண்பிக்;கும் கருவி பறித்துக்கொண்டு, படகில் இருந்து டீசல் கேன்களை கடலில் தூக்கி வீசிவிட்டு மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் விரட்டி அடித்தனர். காயமடைந்த மூன்று மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், உதயகுமார், தமிழ்ச்செல்வன், புவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், கபிலன், சுகன், ஹாரூன் ஆகிய 8 மீனவர்கள் மீது நான்கு படகுகளில் வந்த 9 இலங்கை கடற் கொள்ளையர்கள் படகை சூழ்ந்துகொண்டு வீச்சருவாள் கட்டை போன்ற ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி மீன்பிடி வலைகள் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு விரட்டி அடித்தனர்.உடைமைகளை பறிகொடுத்து ஆபத்தின் விளிம்பில் இருந்து தப்பித்து வந்த புஷ்பவனம் மீனவர்கள் பஞ்சாயத்தார் மற்றும் மீன்வளத் துறையின் இடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேசி இந்த சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய எல்லையில் இந்திய கப்பற்படை மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படை தன்மையை தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சரும் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.