வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. நீங்க எப்படி யோசிச்சாலும் சிக்கிக் கொண்டுதான் இருக்கீங்க.

Continues below advertisement

திருச்சி: யாருய்யா நீ... எப்படி எல்லாம் யோசிக்கிற என்று திருச்சி மக்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் திருச்சி ஏர்போர்ட்டில் நடந்துள்ளது. என்ன தெரியுங்களா?

Continues below advertisement

வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. கடத்துபவர்கள் புது விதமாக யோசிச்சாலும், நம்ம ஏர்போர்ட் அதிகாரிகள் துருவி, துருவி கண்டுபிடிப்பதும் தொடர் கதையாகிறது. இது  நம்முடைய இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.. இந்த தங்கம் கடத்தும் சம்பவங்கசளை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டபோதிலும், தினுசுதினுசான கடத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

இதற்கெல்லாம் காரணம், உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இப்படி கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்கள். கிலோ கணக்கிலான தங்கத்தை விமானங்கள் அல்லது கப்பல் மூலமாக கடத்துவதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால்தான், தங்க கடத்தலை ஒழிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு துறை செயல்படுகின்றன.

இதையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைக்கவும், கடத்தல் சம்பவங்களும் குறைய துவங்கின. கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 175 கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ தங்கம் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நூதன கடத்தல்

எனினும் தங்க கடத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.. நேற்றுகூட திருச்சி ஏர்போர்ட்டில் நூதனமான மோசடி நடந்துள்ளது. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா... ஒரு வேளை ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ என்றுதான் கேட்க தோன்றுகிறது. திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய். அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இதில், துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கு அதிக அளவிலான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அப்படி சார்ஜாவிலிருந்து, திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஒரு பயணி மீது அதிகமான டவுட் எழுந்தது.

உன்னோட செயல்ல திமிர்தனம் தெரியுதே என்பது போல் அவரோட செயல்கள் இருந்துள்ளது. இதனால், அவரை மட்டும் சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த உடமையில், ஐஸ் உடைக்கும் இயந்திரம் இருந்துள்ளது. என்னடா  இது சுங்கத்துறைக்கு வந்த சோதனை என்று அதிகாரிகள் மீண்டும் அந்த பயணியை சோதித்து உள்ளனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. அப்போதுதான் அந்த ஐஸ் கிரஷர் மிக்ஸி பக்கம் அதிகாரிகள் பார்வை திரும்ப அந்த பயணிக்கும் ஆட்டம் கண்டுள்ளது. ஓஹோ இதுலதான் விஷயம் இருக்கோ என்று அந்த ஐஸ் கிரஷர் மிக்ஸியை அதிகாரி உடைக்க, பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. ஆமாங்க. அதுலதான் தங்கத்தை கடத்தி வந்திருக்காரு. எவ்வளவு தெரியுங்களா? கிட்டத்தட்ட 1.39 கிலோ எடை கொண்ட ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தங்கம்ங்க.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. நீங்க எப்படி யோசிச்சாலும் சிக்கிக் கொண்டுதான் இருக்கீங்க.

இது ஒரு சம்பவம்ன்னா... இன்றும் ஒருவர் சிக்கியிருக்கிறார். அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செஞ்சு இருக்காங்க. அப்போ நாகப்பட்டினம் உம்மா ஹமீது நாச்சியார் (62) என்ற பெண் பயணி, தன்னுடைய உடமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பெண்ணிடம் விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க.

Continues below advertisement
Sponsored Links by Taboola