நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தக்காரர் கட்டுப்பாட்டில் ஊதியம் வழங்கப்படும் அவர்களுக்கு தொடர்ந்து கால தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்தின் ஊதிய 24 தேதிகள் ஆகியும், இதுவரை வழங்காததால், ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரவர்கள் பணிபுரியும் பகுதியிலிருந்து ஒன்றுகூடி பேரணியாக நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மயிலாடுதுறையில் இறுதிக்கட்ட சம்பா அறுவடை பணிகள் - கொள்முதல் நிலையங்களை திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி
போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மாதம் வழங்கப்படும் 8 ஆயிரம் ஊதியத்தை 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊதியத்தை வங்கி கணக்கில் வைக்க வேண்டும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆட்டோவில் வேலைக்கு வரும்போது நாளொன்றிற்கு 80 முதல் 100 ரூபாய் வரை தங்களுக்கு செலவு ஆவதால் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதோடு காலத்தோடு வழங்கிட வேண்டும். உழைப்பிற்கான ஊதியம் கேட்கும்போது ஒப்பந்தகாரர் பணியை விட்டு நிறுத்தப்படும் என மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட வேண்டும் - மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகை மீனவர்களை இரும்பு பைப்பை கொண்டு தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஊதியம் வழங்க படும் என உறுதி அளித்ததோடு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாகவும், தாங்கள் உடனடியாக அனைவரும் ஏதாவது ஒரே வங்கியில் கணக்கை தொடங்க வேண்டுமென சமரச பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட தூய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்