மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் தை அடுத்த முதலைமேடு திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி 90 வயதான அஞ்சலை. இவர் தனது மகள் பானு என்பவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகள் பானு தாய் அஞ்சலையை சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு திட்டியதாக செல்லப்படுகிறது. இதனால் மனம் முடைந்த மூதாட்டி அஞ்சலை, மகளுடன் கோபித்து கொண்டு முதலைமேடு திட்டு கிராமத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி கொள்ளிடம் ஆற்று பாலத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்துள்ளார்.
அப்போது கொள்ளிடம் பாலத்தின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் தனஜெயம் மூதாட்டி தண்ணீரில் குதித்து தத்தளிப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மீனவர் ஏழுமலை என்பவரின் உதவியுடன் படகில் சென்று ஆற்றில் குதித்து ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த மூதாட்டி அஞ்சலியை காப்பாற்றி படகில் ஏற்றி கரை சேர்த்தனர். காவலரின் இச்செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மயிலாடுதுறை மாவட்ட அனைத்திந்திய கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சங்க கௌரவ தலைவர் பாஸ்டர். தங்கதுரை தலைமையில் கோட்டாட்சியர் அர்ச்சனாவிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர். அதில் போதகர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது, கல்லறை தோட்டத்திற்கு அரசு இடம் வழங்க வேண்டும், பட்டா இல்லாத சபைகளுக்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்,
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் சுதந்திரமாக ஊழியம் செய்ய வேண்டும், அனைத்து திருச்சபைகளுக்கும் கட்டிட கட்டுமான பணி சான்று வழங்க வேண்டும், சபையில் ஆராதனை நடத்த என்ஓசி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை கோட்டாட்சிய அர்ச்சனாவிடம் வழங்கினர். அப்பொழுது நிர்வாகிகள் பால். பாலகிருஷ்ணன், மோகன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மயிலாடுதுறை மாவட்ட அனைத்திந்திய கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு சார்பாக ஏராளமானோர் மனு கொடுக்க திரண்டதால் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
PFI Ban : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கான தடை: வெடிகுண்டு தயாரிப்பு ஏடு.. மிஷன் 2041.. என்.ஐ.ஏ வட்டாரங்கள் தகவல்..