ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகை அருகே புத்தூர்  ரவுண்டானாவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து நாகை வழியாக வந்த 2 கார்கள் மற்றும் டாட்டா ஏசி லோடு ஆட்டோவை வாகனத்தை தடுத்து நிறுத்தி தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் லோடு ஆட்டோ வாகனத்தின்  தீவன மூட்டைகளின் அடியில் 250 பாக்கெட்டுகளில் 500 கிலோ  கஞ்சா நூதன முறையில் பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது.

 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நெல்லையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு - 3 இடங்களை மட்டுமே ஒதுக்கியதால் அதிருப்தி

இதையடுத்து கடத்தலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், மாணிக்கவாசகம், முத்துப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ ராஜேஸ்வரன், திருவண்ணாமலையைச் சேர்ந்த உமாபதி, சீர்காழியை சேர்ந்த சந்திரசேகர், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த படகு உரிமையாளர் சிங்காரவேல் உட்பட 6 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கஞ்சாவை கைப்பற்றி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.







 

 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  Local Body Election 2022: சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 48 வார்டுகளில் திமுக போட்டி


மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ள  நாகை தனிப்படை போலீசார், அவர்களை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் குற்றவாளிகளிடம் நேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவிலிருந்து தீவன மூட்டைகளுக்கு அடியில் வைத்து நூதன முறையில்   கொண்டுவரப்பட்ட கஞ்சாவை நாகை வழியாக கொண்டு சென்று படகு மூலம் இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த இருந்தது தெரியவந்துள்ளது.




 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ABP NADU IMPACT | தருமபுரியில் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் வருவாய்துறையினர் ஆய்வு