தஞ்சாவூர்: திருச்சியில் நாளை எந்தெந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது தெரியுங்களா? தெரிஞ்சுக்கோங்க. உங்கள் குடிநீர் தேவைக்கு முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுங்க.
திருச்சியில் நாளை 12ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது. திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் என்பது தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால திருச்சி மக்களே நீங்க உஷாரா இருந்து குடிநீரை தேவைக்கு ஏற்ப சேமிச்சு வைச்சுக்கோங்க.
திருச்சி நகரின் பல பகுதிகளில் நாளை நவம்பர் 12 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடங்கலால் இந்த நிலைமை ஏற்படுகிறது. கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தண்ணீர் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். விராசுபேட்டை, மார்க்கடை, ராக்போர்ட், சிந்தாமணி, பாத்திமா நகர், புதுப்பாளையம், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லை நகர், அண்ணா நகர், கன்டோன்மென்ட்.
காஜாப்பேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுப்பாறை, கல்லான்காடு, சொசைட்டி காலனி, எம்.எம். நகர், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழூர் நகர், காவிரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர், விவேகானந்தா நகர் மற்றும் அம்பேத்கர் நகர்.
மின்சார விநியோகக் கழகம், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் சில முக்கிய பராமரிப்பு வேலைகளைச் செய்ய திட்டமிட்டது. இந்த வேலைகள் இன்று 11ம் நடந்தது. இதனால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து தண்ணீர் இறைக்க முடியாது. அதனால்தான், இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைப் பற்றி பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். குடிநீர் விநியோகம் தடைபடும் நாட்களில், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தற்காலிக சிரமத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.