நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. (கடை எண்: 5790) நேற்று இரவு சூப்பர்வைஸர் பாஸ்கர் மற்றும் சேல்ஸ்மேன் நந்தகோபால் கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அரசு மதுபானக்கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் மனைவி இன்று காலையில் கூட்டுவதற்காக வந்த போது அங்கு இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சூப்பர்வைசர் பாஸ்கருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சை மாணவி மரணம் - 20 பேரிடம் மூன்றரை மணி நேரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

 

இதனையடுத்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து கீழ்வேளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தும் 2 பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் ஷட்டரின் பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு  தப்பிச்சென்று இருப்பதும் தெரியவந்தது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-
  Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்



 

காவல் துறையினர் முன்னிலையில் மதுபான கடையை திறந்த சூப்பர்வைசர் நேற்று விற்பனை செய்த 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 15 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டு நிம்மதி அடைந்தார். இதனை அடுத்து அங்கு இருக்கும் சிசிடி கேமரா மூலம் திருட்டு முயற்சி குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இரவு பகல் என எந்த நேரமும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ்வேளூர் ரயில்வே நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கவே பாஜக தனித்துப் போட்டி’ - வானதி சீனிவாசன் விளக்கம்