தஞ்சாவூரில் மாணவி மரணம்: அரசியல் செய்வதாக பாஜகவை கண்டித்து போராட்டம்

மாணவி மரணத்திற்கு சட்டப்படியான நேர்மையான விசாரணை நடத்தி, மாணவியின் குடும்பத்துக்கு  50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த 17 வயது ப்ளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியின் தந்தை முருகானந்தம் தனது மகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இந்நிலையில், மாணவி தற்கொலையை வைத்து வெறுப்பு அரசியலை தூண்டும் இந்துத்துவா மதவெறியை கண்டித்தும், தமிழக அரசு, மாணவி மரணத்திற்கு சட்டப்படியான நேர்மையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு  50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி அனைத்து கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Continues below advertisement

மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் கோ. நீலமேகம் தலைமை வகித்தார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி மாநகர துணைச் செயலாளர் வயலூர் ராமநாதன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் அயனாவரம்  சி. முருகேசன்,  தி.க. மாவட்ட தலைவர்  சி.அமர் சிங், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், ஐ.ஜே.கே. தெற்கு மாவட்ட தலைவர் ச.சிமியோன்சேவியர்ராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளின் இயக்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பழனி கோயிலுக்கு யாத்திரையாக வந்த எடப்பாடி பக்தர்கள் - 20 டன் பஞ்சாமிரதத்தை பிரசாதமாக வழங்கினர்

மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்

இதில், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அரசியலாக்கி வரும் இந்துத்துவா மதவெறி கும்பலை கண்டித்தும், அதற்கு துணைபோகும் பாசிச பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புக்கள் மீது தமிழக அரசு கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும்,   மாணவி வின் தற்கொலைக்கு உண்மை காரணம் என்ன என்றும், நேர்மையான விசாரணை நடத்திட வேண்டும்,  மாணவியின் குடும்பத்தாருக்கு  50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கடலூரில் மாவட்ட ஆட்சியர் இன்றி நடைபெற்ற 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola