தஞ்சாவூர், கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பொதுத் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மின்சார சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கையை முன்வைத்து வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டு அந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் துவங்கிய நாளை முன்னிட்டு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர்–கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால் துவக்கி வைத்தார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில்,ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் , ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஏஐடியூசி சங்க நிர்வாகிகள் துரை.மதிவாணன், வெ.சேவையா, ஆர்.பி.முத்துக்குமரன், பி.செல்வம் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், அப்பர் சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையில் நான்கு சட்ட தொகுப்பாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்சாரச் சட்டம் திருத்தம் என்ற பெயரால் இலவச மின்சாரம் பறி போகின்ற சாதாரண ஏழை நடுத்தர மக்களுக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய பணமயமாக்கல் கொள்கை என்ற பெயரால் பொது துறைகள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட பணியாளர்களுக்கும், அவுட்சோர்சிங் என்ற பெயரால் ஒப்பந்த முறையில் பணி புரிகின்ற அனைவருக்கும் சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரிக்கவேண்டும், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு முன்பு செயல்படுத்திய பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், விவசாய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றாலும் விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்ககளிட்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐஏடியூசி மாநில குழு உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎம் சார்பில் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தை யொட்டி பாஜக அரசு சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. போராட்டம் நடைபெற்று நவம்பர் 26ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, கும்பகோணம் நகர சிபிஎம் மேலக்காவேரி கிளையில் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.