பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள், மகளிர் சங்க மாநில தலைவர் நிர்மலா ராஜன், மகளிர் சங்க மாநில செயலாளர்கள் பானுமதி சத்யமூர்த்தி, செல்வி செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இந்த செயற்குழு கூட்டத்தில் மகளிர் அமைப்பு கட்டமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மக்கள் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வரும் கொள்கைகளையும்,  திட்டங்களையும் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என  நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 




தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும், புதிய பேருந்து நிலையம் உடனடியாக அமைக்க வேண்டும், இதுபோன்று மக்கள் நல பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் பாமக மாவட்ட தலைவர் அன்பழகன், நிர்வாகிகள் சக்திவேல், காமராஜ், கமல் ராஜா, காசி பாஸ்கரன்,  ரவிச்சந்திரன், முருகவேல், குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும்,  ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறையில் ரயில்வே சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்வதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை நகராட்சி 22 -வது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கிராமப்புறங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதைப் போன்று நகர்ப்புறங்களிலும் பகுதி சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 1 -ஆம் தேதி உள்ளாட்சி நாள் தொடங்கி நகர்ப்புறங்களிலும் பகுதி சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை நகராட்சி 22 -வது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக்கூட்டத்தில் மயிலாடுதுறை ரயில்வே சாலை ஓரங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 




நகரின் அனைத்துப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் வெட்டப்பட்டு வெளியாகும் இறைச்சிக் கழிவுகளை மயிலாடுதுறை - தரங்கம்பாடி பழைய ரயில்வே சாலையின் ஓரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி நகரமன்ற உறுப்பினர் உஷாராணி ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில், இக்கூட்டத்தில், நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி பொறியாளர் சனல்குமார் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.