செங்கிப்பட்டியில் புதிய விளையாட்டு நகரம் அமைக்க திட்டமா..?

தமிழகத்தில் அமையவுள்ள மெகா விளையாட்டு நகரம் அமைக்க செங்கிப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், மாநிலத்தின் முதல் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியமான தளங்களில் ஒன்றாகவும், இளைஞர்களுக்கு ஒலிம்பிக்கிற்கு பயிற்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Continues below advertisement

இதுதொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ”சென்னையில் சாதகமான நிலம் அமையாத காரணத்தால், செங்கிப்பட்டி இந்த விஷயத்தில் சேர வழி நேர்ந்திருக்கிறது. மேலும்  மறைமலைநகர் அருகேயும், செங்கல்பட்டு நகருக்கு அருகிலும் இரண்டு இடங்களிலும் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இரண்டுமே பொருத்தமற்றவை என தெரியவந்ததும், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதாலும் ஒரு தளம் நிராகரிக்கப்பட்டது. செங்கிப்பட்டி, திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ளதால், விளையாட்டு வளாகத்திற்கான முதல் முன்னுரிமையாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

மேலும், சென்னை மற்றும் திருச்சி மட்டும் பரிசீலனையில் உள்ளது. சென்னையைச் சுற்றி சாத்தியமான தளங்களைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், புவியியல் ரீதியாக சாதகமான மாவட்டமாக திருச்சி இருப்பதால் முதல்வரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தேர்ந்தெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “திருச்சி, மாநிலத்தின் இரண்டாவது பரபரப்பான சர்வதேச விமான நிலையமாகவும், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற மையங்கள் உட்பட ஒன்பது சர்வதேச இடங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே 11-வது இடத்திலும் இருப்பதால், செங்கிப்பட்டி தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறது.



இங்கு விளையாட்டுக் கல்லூரிகள், தங்கும் விடுதிகள், பயிற்சி வசதிகள் அமைக்க விளையாட்டு நகருக்கு சுமார் 150-300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. செங்கிப்பட்டியில் 300 ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலம் உள்ளது. இது எய்ம்ஸ் திட்டத்திற்காக முன்பே அடையாளம் காணப்பட்டது. விளையாட்டு நகரம் எதிர்காலத்திற்கான முதலீடு, அதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்துவோம். நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை வரவேற்று, இங்குள்ள தடகள சங்கங்கள், செங்கிப்பட்டியை தேர்வு செய்து, உள்கட்டமைப்பு மேம்பாட்டை பரவலாக்க அரசை வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட தடகள சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கையில், “நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருந்தும் இளைஞர்களை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு மிகவும் தேவையாக உள்ளது. திருச்சி மற்றும் தஞ்சாவூர், ஏற்கெனவே தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளது. மெகா விளையாட்டு நகரத்துக்கு செங்கிப்பட்டி சிறந்த தேர்வாக இருக்கும்” என தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola