தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா 117-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி தஞ்சையில் இன்று தி.மு.க சார்பில் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117-ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமையில் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள்  ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். 

பின்னர் அங்கு அண்ணாவின் உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதேபோல் கலைஞர் அறிவாலயத்திலும்  பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம் து.செல்வம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்டத் துணைச்செயலாளர்கள் கனகவள்ளிபாலாஜி, புண்ணியமூர்த்தி,  பகுதி செயலாளர்கள் மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன் மற்றும் மாவட்ட, மாநகர,  ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக மாலை அணிவிப்பு

தஞ்சையில் அ.தி.மு.க சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் மாநகர செயலாளர் என்.எஸ். சரவணன், பகுதி செயலாளர்கள் பஞ்சு, புண்ணியமூர்த்தி, மனோகரன், சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே வந்தனர். இதையடுத்து அங்கு உள்ள அண்ணா சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம்,  எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் துரை.வீரணன், விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம்,  துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், அம்மா பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி, மருத்துவப் பிரிவு துணை செயலாளர் துரை கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாவித்திரி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் வெண்ணிலா பாலைரவி,  மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் சங்கர் , மாவட்ட பொருளாளர் அன்புச்செல்வன்,   பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி,  மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புகுழு சார்பில் முன்னாள் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இதையொட்டி அண்ணா சிலைக்கு மாநில அம்மா பேரவை இணை செயலாளர் துரை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது ‌. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், பகுதி செயலாளர்கள் ரமேஷ், முத்துச்சாமி, மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன்,  ஒன்றிய செயலாளர்கள் சத்யராஜ், அரசு,  மணிவண்ணன், செந்தில்குமார் ,பாலா,  அண்ணா தொழிற்சங்கம் வீரராஜ், மாவட்ட துணை செயலாளர் டாரத்திகிரேஸி,  பொதுக்குழு உறுப்பினர் ராஜா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செல்லத்துரை , மாநகராட்சி  கவுன்சிலர் சரவணன் , மகளிர் அணி ரஞ்சனி , மாவட்டம் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.