வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை தேர்தல் வரும்போது  மக்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும், எடப்பாடி தலைமையிலான அதிமுக என்பது நெல் மணி, ஓபிஎஸ் அணி என்பது பதர்; பதரை நீக்கி நல்ல நெல்மணிகளை அதிமுக கண்டுள்ளது வரலாறு படைக்கும் எனவும் அதிமுக கழக அமைப்பு செயலாளர் ஒ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
 
அதிமுக சார்பில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து நாகை அவுரி திடலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன், “குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 உயர்த்தப்படும், உரம் விலை குறைக்கப்படும் என தெரிவித்த திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு? 16 மாத ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, இதுதான் திமுகவின் சாதனை. தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார். அப்போது மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன கோசங்கள் எழுப்பினர். 
 
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், எடப்பாடி தலைமையிலான  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  நெல் மணி போல எனவும், ஓபிஎஸ் அணி என்பது நெல்லில் உள்ள பதர் போல என்றார். மேலும் பதரை நீக்கி நல்ல நெல்மணிகளை அதிமுக தற்போது கண்டுள்ளதாகவும்,  இது வாகை சூடும் வெற்றி பெறும், வரலாறு, படைக்கும் என ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

Continues below advertisement

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண