Just In

Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்

Ponmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.K

விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
சென்னை டூ திருப்பதி டூ திருச்செந்தூர்.. புதிய அதிநவீன ஏசி பேருந்துகள் இயக்கம்.. வாவ்
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிரை காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி கடைசிநாள்
’’ஒரு ஏக்கருக்கு 488.25 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு’’
Continues below advertisement

விவசாயம்
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆகும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் இயற்கை சீற்றங்களால் எதிர்பாராமல் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை சந்திப்பதற்கு பயிர் காப்பீடு திட்டம் மிகுந்த உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் மத்திய மாநில அரசுகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை ரத்து செய்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து இருந்தனர். மேலும் பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் வைத்து வந்தனர். மேலும் தற்பொழுது செய்யப்போகிற சம்பா சாகுபடிக்காகவாவது பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும் வருவாயை நிலைப்படுத்தும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத்தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சம்பா தாளடி பருவங்களில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. சம்பா தாளடி பருவங்களில் சாகுபடி செய்யும் நெல்லினை பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் மாதம் 15ஆம் தேதி ஆகும். அதே போன்று ஒரு ஏக்கருக்கு 488.25 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எனவே சம்பா தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ, அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, தங்கள் விருப்பத்தின் பெயரில் சம்பா தாளடி நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அல்லது தேசிய வங்கிகளில் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னர் விரைவில் தங்களது பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.