மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை கொண்டு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட 4 தாலுகாக்களில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி இந்தாண்டு நடைபெற்று. இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் பல இடங்களில் விவசாயிகள் அறுவடை செய்யது வருகிறனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான குறுவை நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக முப்பது இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள மூன்று நெல் கொள்முதல் நிலையங்கள் போதாது என்றும் இதனை அதிகரிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் மாவட்ட விவசாயிகள் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்நிலையில் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 800 சிப்பம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டு 250 முதல் 500 சிப்பம் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை அடிக்கி விற்பனை செய்வதற்காக 10 நாட்களுக்கு மேலாக காத்து கிடக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்தநிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட பல இடங்களில் திடீரென பெய்த மழையால் மணல்மேடு, கடக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுநேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடிக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நேரத்தில் தங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யாமல் பாதுகாப்பாக வைப்பதற்கு கிடங்குகளும், முறையாக மூடி வைக்க பாலீத்தின் சாக்குகள் இன்றி மழையில் நனைந்து சேதமான நெல்லுக்கு உண்டான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று வந்த நிலையில் தற்போது வேளாண் துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால், அந்த சான்றிதழை பெறுவதற்கும் கால தாமதம் ஆவதால் முன்புபோல் கிராம நிர்வாக அலுவலரிடம் பெரும் சான்றுகளை வைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.