தஞ்சாவூர்: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வினோத் ரவி இன்று அமைச்சராகி உள்ளார். யார் இந்த வினோத் ரவி. வாங்க பார்ப்போம்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவியின் அரசியல் பயணம் மற்றும் சமூக பங்களிப்பு குறித்த விரிவான தொகுப்புதான் இது. கடந்த மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் கும்பகோணம் தொகுதியிலிருந்து தவெக எம்.எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட வினோத் ரவி இன்று வேளாண் துறை அமைச்சராகி உள்ளார்.

Continues below advertisement

ஆரம்பகால வாழ்வும் அரசியல் பிரவேசமும்

கும்பகோணத்தைச் சேர்ந்த ரவி – வேளாங்கண்ணி தம்பதியருக்கு மகனாக கடந்த 11.01.1994 அன்று பிறந்தவர் வினோத் ரவி. சமூக அக்கறை கொண்ட இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இயக்கத்தின் மீதான பற்று மற்றும் தலைமையின் அறிவுறுத்தல்களை ஒழுங்குமுறையுடன் பின்பற்றிச் செயல்பட்ட இவருக்கு, அடுத்தடுத்து முக்கியப் பொறுப்புகள் தேடி வந்தன.தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) பொறுப்பாளர்இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர்கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி, இயக்கத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக அரும்பணியாற்றினார்.

சமூகச் சேவையில் தனி முத்திரை

அரசியல் கடந்து, ஒரு ரோட்டரி சங்க உறுப்பினராகவும் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகிறார். "மக்கள் சேவையே முதன்மை" என்ற முழக்கத்துடன், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்தே இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை

ஏழை எளிய மக்களுக்குத் தொடர் நிவாரண உதவிகள்.மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த கல்வி உதவித்தொகை வழங்குதல்.ஆலயங்களில் அன்னதானம் மற்றும் ரத்ததான முகாம்களை ஒருங்கிணைத்தல்.இயற்கை பேரிடர் காலங்களில் களத்தில் நின்று அவசர கால உதவிகளை வழங்குதல் என்று இவரது சமூகப்பணிகள் நீண்டுக் கொண்டே செல்கிறது. இவரது இந்தப் பணிகளில் இயக்க நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகத்தில் புதிய பயணம்

கடந்த 15 ஆண்டு கால களப்பணி மற்றும் ஒழுக்கமான செயல்பாட்டிற்கு அங்கீகாரமாக, 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளராக வினோத் ரவி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தவெகவின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தொகுதி முழுவதும் ஒரு இடம் விடாமல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தலில் வெற்றிப்பெற்று இன்று அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

தமிழக அரசியலில் முதல்முறையாக அமைச்சராக கால் பதித்துள்ள அவர், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளார். மக்களோடு மக்களாக நின்று திறம்பட பணியாற்றி வரும் இவருக்கு, தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள கும்பகோணம் வினோத் ரவிக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, சர்க்கரை, கரும்பு மீதான கலால் வரி, கரும்பு மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு ஆகியவை இந்த துறையில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.