மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள  கூழையார் மீனவர்  கிராமத்தில் கடற்கரையோரம் வனத்துறை சார்பில் கடல் ஆமை முட்டை பாதுகாப்பகம் மற்றும் முட்டை பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் கடலோரங்களில் இருந்து ஆமை முட்டைகள் சேகரித்து அவற்றை பாதுகாத்து, குஞ்சு பொறித்த பின் அவை கடலில் விட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தாண்டு சேகரித்து குஞ்சி பொறித்த 2000 ஆயிரம் ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.




அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரிட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வாசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு படை எடுக்கின்றனர்.


தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 200 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினரும், தன்னார்வலர்களும்  சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக 45 நாட்கள் வைத்து அவைகள் குஞ்சி பொறித்த உடன் கடலில் பாதுகாப்பாக விட்டுவருகின்றனர். 


 




இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு சென்ற 2000 ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளை கூழையார் கடல்கரையோரம்  அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு முட்டை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அனைத்து குஞ்சுகளும் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது,  இதனை தொடர்ந்து அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.




கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே இப்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநிலக் கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன.  ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீனவர்களின் நண்பனாகப் பார்க்கப்படுகின்றன.




இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறி மீன்களை உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும். ஆலிவ் ரிட்லி ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் தான் அதிகமாக   இறந்து கரை ஒதுங்கும். இதற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான் என்றும், ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.



மேலும் ஆமை குஞ்சு முட்டைகளை இரவு 11 மணிக்கு மேல்  தொடங்கி அதிகாலை 5 மணி வரை இரவு நேரங்களில் மட்டும் சேகரிக்க படுவதால்,  மயிலாடுதுறை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் இரவு நேரங்களில் அவ்வாறு சென்று சரியான முறையில் முட்டைகள் சேமிக்கப்படுவதில்லை என்றும், இதனால் ஆமை குஞ்சு முட்டைகள் நாய், நரி மற்றும் ஒரு சில மனிதர்களால் சூறையாடப்படுவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வரும் காலங்களிலாவது வனத்துறையினர் இரவு நேரங்களில் சரியான முறையில் கடற்கரை பகுதிகளில் ரோந்து சென்று அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.