தஞ்சாவூர்: யுஜிசி நெட் டிசம்பர் 2025 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக என்டிஏ அறிவித்துள்ளது. இந்த முடிவுகளை ugcnet.nta.nic.in தளத்தில் முடிவுகளைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய யுஜிசி நெட்  டிசம்பர் 2025 தேர்விற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு லட்சக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இப்போ அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வந்து சேர்ந்துள்ளது. அட ஆமாங்க. என்டிஏ வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தத் தேர்வு முடிவுகள் வரும் 4ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாக நாளையோ முன்னதாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 'உதவி பேராசிரியர்'  பணிக்கும், மற்றும் 'இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை' (JRF) பெறுவதற்கும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் 2025-க்கான இந்தத் தேர்வுகள், கடந்த டிசம்பர் 31, 2025 முதல் ஜனவரி 7, 2026 வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. கணினி வழியில் நடைபெற்ற இத்தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Continues below advertisement

தேர்வு முடிவுகள் வெளியானவுடன், தேர்வர்கள் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

வெளியிடப்படும் முடிவுகளில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள், தாள் 1 மற்றும் தாள் 2-ல் பெற்ற தனித்தனி மதிப்பெண்கள், மற்றும் பர்சன்டைல் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். மேலும், அவர்கள் உதவிப் பேராசிரியர் தகுதி மட்டும் பெற்றுள்ளார்களா அல்லது ஜேஆர்எஃப் (JRF) தகுதியையும் சேர்த்து பெற்றுள்ளார்களா என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்காலிக விடைக்குறிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் கோரப்பட்டன. தற்போது இறுதி விடைக்குறிப்பு  மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியில் என்டிஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அடுத்தக்கட்ட பணிகளுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிகாரப்பூர்வ தளத்தைத் தவிர வேறு எந்த போலியான தளங்களையும் நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்த போலியான தகவல்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.