கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ரயில்  பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின் அகில இந்திய ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மஞ்சுநாதா, கோட்லாஉமாராணி, அபிஜித்தாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர், பயணிகளுக்கான முதலுதவி மருத்துவ மையம்,

  பிளாட்பார பயணிகளின் இருக்கைகள், மேற்கூரைகள், நிழற்குடைகள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா,  கண்காணிப்பு கேமராக்களின் தெளிவாக தெரிகிறது,  ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா, தரமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்றும், அதனை நுகர்ந்த பார்த்தும், குடித்து பார்த்தனர், கேன்டீனிலுள்ள உணவு பொருட்கள் காலாவதியான நாட்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து  துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக  கழிவறை வசதிகள் பராமரிக்கப்படுகிறதா, கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என அனைத்து ரயில் நிலையத்திலுள்ள பகுதிகள் முழுவதையும் நேரில் பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.




ஆய்வின் போது, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ரயில்சரவணன்,  கடந்த 10 ஆண்டுகளாக நின்று சென்று கொண்டிருந்த மைசூர் மற்றம் திருச்செந்துார் விரைவு ரயில்கள்,  கொரோனா நோய் தொற்று காலத்தில் திடீரென பாபநாசம் ரயில் நிலையத்தில் நிறுத்தும் வசதி ரத்து செய்யப்பட்டது. தற்போது ரயில்வே நிர்வாகம் கொரோனா தொற்றுக்கு முன்பாக இயங்கிய அனைத்து ரயில்களும் நின்று சென்ற இடங்களில்,  நின்று செல்லும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தும், ஆனால் பாபநாசம் ரயில் நிலையத்தில், மைசூர் மற்றும் திருச்செந்துார் விரைவு ரயில்கள் நிறுத்தாமல் சென்று வருகின்றனர். இது தொடர்பாக எம்பிக்கள் சண்முகம், ராமலிங்கம், ஜிகே,வாசன், ரயில்வே நிர்வாக அதிகாரிகள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பாபநாசம் ரயில் நிலையத்தில் வருடத்திற்கு 1.5 கோடியும், மாதம் தோறும் 11.5 லட்சம் வருவாய் பெற்று தரும் முக்கியமான ரயில் நிலையமாகும்.


மேலும் பாபநாசம் தாலுக்கா தலைநகரமாகவும், எம்எல்ஏ தொகுதியாகவும், ஆன்மீக திருக்கோயில் மையமாக இருப்பதாலும், குறிப்பாக திருக்கருக்காவூர், 108 சிவாலயம் போன்ற கோயில்களை தரிசனம் செய்வதற்காக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து, வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாபநாசத்தில் இறங்க முடியாமல், கும்பகோணம் அல்லது தஞ்சை ரியில் நிலையங்களில் இறங்கி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலவிரயம் மற்றும் செலவுகள் ஆகின்றது. எனவே, ஏற்கனவே ரயில்கள் நின்று சென்ற ரயில்களை மீண்டும் பாபநாசத்தில் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்.  மேலும், பாபநாசம் முன்பதிவு கணினி மையம், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றது. அடிக்கடி இங்கு மின்தடை ஏற்படுவதால், மாற்று ஏற்பாடு செய்யும் வகையில், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும். அத்துடன் நாள்தோறும் பயணம் செய்யும் ஏசி பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், புதியபயணிகள் ஒய்வு அறை கட்டித்தரவேண்டும்.




கும்பகோணம் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கிரி கூறுகையில், கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள பயணிகள் ஒய்வறையை சீர்படுத்த வேண்டும். கும்பகோணத்தில் யாத்திரை நிவாஸ் நிறுவ வேண்டும். பல ஆண்டுகளாக கழிவு நீர் சாக்கடையை பராமரிக்கப்படாததால்,  அதனை நிரந்தரமாக சீர் செய்ய வேண்டும். 2 வது நடை மேடை செல்வதற்கு லிப்ட் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை  விளக்கி மனுக்களை வழங்கினர்.