உப்பு சத்தியாகிரக போராட்ட 93-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வேதாரண்யத்தில் தியாகிகள் காந்தியவாதிகள், காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

 


நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக போராட்ட 93-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிட வளாகத்தில் தியாகிகள் காந்தியவாதிகள், காங்கிரஸ் கட்சியினர் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரியும் உலக அமைதிக்காகவும் மத நல்லிணக்கத்தை வலியுருத்தியும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

 

ஆங்கிலேய அரசாங்கம் உப்புக்கு வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  அகஸ்தியம்பள்ளியில் கடந்த 1930-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்ற இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு; ஆண்டு தோறும் ஏப்ரல் 30ம் தேதி தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



 

இந்த நிலையில் உப்பு சத்தியாக்கிரக நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உண்ணாவிரத்தை துவக்கி வைத்தார். உப்பு சத்தியாக் கிரக போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினத்தின் பேரன் வேதரத்தினம் தியாகிகள் உப்புசத்தியாக்கிர தண்டி யாத்திரை குழுவினர்  காங்கிரசார் கலந்து கொண்டு நூல் நூற்று தேசபக்தி பாடல்ளை பாடினர். இதில் திரளான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.