உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா பரவல்காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் முழு முடக்கம் அப்போது அறிவித்திருந்தது, கொரோனா முதலாம் அலையின் போது பேருந்து ரயில் மற்றும் தனியார் வாகனங்கள் மற்றும் சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல பொது சேவைகள் நிறுத்தப்பட்டு 'இ'பதிவில் மூலமாகவே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது, பிறகு படிப்படியாக தொற்று குறைவின் காரணமாக சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில்கொரோனா  அச்சம் காரணமாக கடந்த 2 வருடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் -  திருச்சிராப்பள்ளி - நாகப்பட்டினம் இடையே இன்று முதல் 687 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி




இந்த ரயில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது  இந்த ரயில் சேவையை தொடங்கும் விதமாக இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பாக நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையம் மேலாளர், லோகோ பைலட், அசிஸ்டென்ட் லோகோ பைலட், காவலர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் ரயிலில் பயணம் செய்த அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் ரயில்வே ஊழியர்கள்  முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்கும் படி பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். முதல் நாளான இன்று ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காவல்துறை தகுதி தேர்வுக்கு எடையை கூட்டி காட்ட 4 பேண்ட்களை போட்டு வந்த பெண் தகுதி நீக்கம்





இந்த நிலையில் பயணிகள் ரயில் ஆக செயல்பட்டு வந்த ரயில் தற்போது விரைவு ரயில் ஆக செயல்படுவதால் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்கான பயண கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது சாதாரண ரயிலில் நாகையில் இருந்து திருச்சிக்கு செல்ல 30 ரூபாய் பயண கட்டணம் இருந்த நிலையில் தற்சமயம் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்