நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் நம்பியார் நகர் செருதூர் விழுந்தமாவடி புஷ்பவனம் கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் கொண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் சீற்றம் கடல் காற்று புயல் போன்ற காரணங்களால் நீரோட்டத்திற்கு ஏற்றார்போல் கடல் நீர் இழுத்து செல்லும் போது மீனவர்கள் திசைமாறும் அவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் படகை பறிமுதல் செய்து மீனவர்களையும் கைது செய்யும் நிகழ்வு தொடர்கதையாகி வரும் நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை பறித்துக்கொண்டு அவர்களது வலைகளையும் இருப்பதோடு ஜிபிஎஸ் திசைகாட்டும் கருவி செல்போன் பேட்டரி புல்லட் ரவையை கொள்ளை அடித்துக்கொண்டு மீனவர்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்

 



 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஜெய்பீம் பட பாணியில் இருளர் இன சிறுவன் 4 பொய் வழக்குகள் பதிவு ?- காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதேபோல் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தை கிருஷ்ணசாமி படகில் சென்ற நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு நான்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 13 பேர் புஷ்பவனம் மீனவர்களின் படகில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடியாக ஏறி விஜேயேந்திரனை வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கி இரண்டு செல்போன்கள் இரண்டு லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலைகளை பறித்த சென்றனர்.






 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal 2022| நூற்றாண்டு கடந்த உழவு தொழில் உபகரணங்களை பத்திரமாக பாதுகாத்து வரும் குமரி மாவட்ட விவசாயி

மேலும் மற்றோரு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வடிவழகி என்பவரின் படகில்  ஜெயபால், தங்கதுரை, நீலமேகம் ஆகியோர்  மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சூழ்ந்து கொண்டு அவர்களை மிரட்டி 75 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள வலைகளை பறித்து கொண்டு அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்திய கடற்பரப்பில் அச்சத்தோடு மீன்பிடி தொழில் செய்யும் நிலை உருவாகியுள்ளதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரை திரும்பிய மீனவர்கள் மிரட்சியோடு கவலை தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளும் கடலோர காவல் படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.