நாகையில் உவர்நீர் இறால் வளர்ப்பு பண்ணைகளில் வெண்புள்ளி நோய் தாக்குதலால் 14 கோடி ரூபாய் மதிப்பிலான இறால்கள் உயிரிழந்தது. பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி காப்பீடு செய்ய அரசு உத்தரவிட வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாகை மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால் கடற்கரையோர கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உவநீர் இறால் வளர்ப்பு பண்ணை அமைத்து இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வளர்க்கப்படும் இறால்கள் தூத்துக்குடி மற்றும் கேரளா கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக லாபம் தரும் இறால் பண்ணைகள் தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது.



 

இந்த ஆண்டு நாகை மாவட்டம் பாப்பா கோவில், கருவேலங்கடை, வேளாங்கண்ணி தெற்கு பொய்கை நல்லூர், பெரிய தம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இறால் வளர்த்து வந்த உவர்நீர் இறாலில் வெண்புள்ளி நோய் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து ஒவ்வொரு இறால் பண்ணைகளால் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான இறால் குஞ்சுகள் உயிரிழந்துவிட்டன. இதன் காரணமாக ஏக்கருக்கு 5 லட்ச ரூபாயிலிருந்து 7 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்த இறால் வளர்ப்பு விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இறால் வளர்ப்பு விவசாயிகள் ஏற்படும் பேரிழப்பை தடுக்க இறால் வளர்ப்பை காப்பீடு செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்த விவசாயிகள், அதிக குளிர் மற்றும் அதிக வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இந்த ஆண்டும் இறால் உற்பத்தி அனைவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண